"தேர்தலில் வாய்ப்பு கொடுத்தாலும்.." - உடைத்து பேசிய சரத்குமார்

x

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்தாலும், தாம் போட்டியிடமாட்டேன் என்று நடிகரும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான சரத்குமார் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி தூய சவேரியார் கல்லூரியில் நடைபெற்ற கலைத் திருவிழாவில், கொம்பு சீவி திரைப்பட குழுவினர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய விஜயகாந்தின் மகனும், நடிகருமான சண்முக பாண்டியன், கல்லூரி வாழ்க்கையை நன்றாக அனுபவிக்க வேண்டும் என்றும், ஒரு டிகிரி ஆவது கட்டாயம் முடிக்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், தேர்தலில் இளம் தலைமுறையினருக்கு வழிவிடுவதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்