வாக்குச்சாவடிக்குள் நாதக வேட்பாளருக்கு அனுமதி மறுப்பு - பரபரப்பில் ஈரோடு இடைத்தேர்தல்

x

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை, வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்க போலீசார் மறுத்தனர். கட்சி துண்டுடன் வாக்குச்சாவடிக்கு வந்த அவரை, பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் தடுத்து நிறுத்தினர். கழுத்தில் இருந்த கட்சி துண்டை கழற்றிய பிறகு, வாக்குச்சாவடிக்குள் நா.த.க வேட்பாளர் அனுமதிக்கப்பட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேட்பாளர் சீதாலட்சுமி, காவல்துறையினர் பாரபட்சம் பார்ப்பதாக குற்றம்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்