``நாதகவுடன் போட்டி - காலத்தின் கொடுமை..'' - திமுக வேட்பாளர் சந்திரகுமார்

x

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், திமுக வேட்பாளர் சந்திரகுமார் வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக துணைப் பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ், மறைந்த எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத் உள்ளிட்ட 4 பேருடன் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்த அவர், தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷிடம், தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இன்றைய நவீன அறிவியல் வளர்ச்சியில் நாடு எங்கேயோ சென்று கொண்டிருக்கும் நிலையில், கட்டை வண்டியில் போ என்று சொல்லும் தலைவரை வைத்துக் கொண்டு அவர்களோடு போட்டியிடுவதை காலத்தின் கொடுமையாக கருதுகிறேன் என நாம் தமிழர் கட்சியை விமர்சித்தார்.


Next Story

மேலும் செய்திகள்