அமைச்சர் முத்துசாமி கொடுத்த உறுதி | Erode | Muthusamy
அமைச்சர் முத்துசாமி கொடுத்த உறுதி
தெருநாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த மேலப்பாளையம் அருகே இரும்பு வலைகளால் செய்யப்பட்ட புதிய ஆட்டுப்பட்டியை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தெரு நாய்கள் கடித்து உயிரிழக்கும் ஆடுகளுக்கு இழப்பீடு தொகை வழங்கும் ஆணைக்கான கோப்புகள் முதல்வரிடம் உள்ளதாகவும், தெருநாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
Next Story
