நாதக பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பா? - தேர்தல் அதிகாரி விளக்கம்

x

நாம் தமிழர் கட்சியினர் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுக்கப்படுவதாக குற்றம் சாட்டப்படும் நிலையில், மாவட்ட தேர்தல் அதிகாரி ராஜகோபால் சுன்கரா மறுப்பு தெரிவித்துள்ளார். ரங்கம்பாளையத்தில் உள்ள கல்லூரியில், வாக்குச்சாவடியில் பணியாற்றும்

அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சியை அவர் பார்வையிட்டார். வாக்குச்சாவடியில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும் அறிவுரைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தேர்தல் அதிகாரி, சுவிதா போர்டல் ஆன்-லைன் மூலமாக மட்டுமே பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கப்படுவதாக தெரிவித்தார். இதில் பாரபட்சமாக செயல்பட முடியாது என்றும், எந்த வேட்பாளரும் அலைக்கழிக்கப்படவில்லை என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்