ஈபிஎஸ் பிறந்த நாள் - இன்று பிறந்த 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு

x

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளையொட்டி, சென்னை மேடவாக்கம் அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது. பரங்கிமலை அதிமுக ஒன்றிய செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அதிமுக முன்னாள் எம்.பி. வேணுகோபால், சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் ஆகியோர், 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வழங்கினர். மேலும், மேடவாக்கம், பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள ஆலயங்களில் சிறப்பு பூஜைகளும், 3 ஆயிரம் பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவில் கோவிலம்பாக்கம் மணிமாறன், சக்திவேல், கண்ணபிரான், கண்ணதாசன், பிரதாப் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்