Edappadi Palanisamy | Modi | ஈபிஎஸ்க்கு பிரதமர் க்ரீன் சிக்னல்

x

கோவை வருகை தரும் பிரதமர் மோடியை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமான நிலையம் சென்று வரவேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று மதியம் 1.30 மணி அளவில் கோவை விமான நிலையம் வருகை தரும் பிரதமர் மோடி, கொடிசியா மைதானத்தில் நடைபெறும் வேளாண் மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். பின்னர், வேளாண் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் நிகழ்த்தும் அவர் 3.15 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டு, தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார். இந்த நிலையில், பிரதமரை சந்திக்க எடப்பாடிபழனிசாமிக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்