அறியாமையில் பேசும் ஈபிஎஸ்.." - அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பரபரப்பு பதிவு

x

தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச வேண்டாம் என தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் இன்றுவரை, ஆயிரத்திற்கும் மேலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, 77% க்கும் மேலான ஒப்பந்தங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார் உதவாத முதலீட்டு திட்டங்களுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளிப்பதில்லை என்றும்,புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்களுக்கான சலுகைகள் மதிப்பிடாமல் கொடுப்பதில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார் மேலும், உண்மைக்கு மாறான தகவல்களை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி.பழனிசாமி தெரிவிக்க வேண்டாம் என்றும், இனியும் தொழில்துறை சார்ந்த முதலீடுகள் பற்றி அறியாமையில் பேச வேண்டாம் என அந்த பதிவின் வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்