``எவர் திணிக்க துணிந்தாலும்..’’ - நேரம் பார்த்து பாய்ந்து அடித்த ஈபிஎஸ்
"உள்ளத்தில் தமிழ் - உலகிற்கு ஆங்கிலம்" என்ற பகுத்தறிவு வாய்ந்த இருமொழிக் கொள்கையால் வெல்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். உலகத்தாய்மொழி தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள பதிவில், எல்லா மொழிகளுக்கும், எம்மொழி பேசும் மக்களின் உணர்வுகளுக்கும் சமத்துவப் போக்குடன் எப்போதும் மதிப்பளிப்போம் என்று தெரிவித்துள்ளார்.
அதே சமயம் எம்மொழியை நம்மீது எவர் திணிக்கத் துணிந்தாலும், அதனை "உள்ளத்தில் தமிழ் - உலகிற்கு ஆங்கிலம்" என்ற பகுத்தறிவு வாய்ந்த இருமொழிக் கொள்கையால் வெல்வோம் என உறுதியேற்போம்... தமிழ் வெல்லும் என்றும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
Next Story