ECRல் பெண்களை துரத்திய சம்பவம்..! கொந்தளித்து ஈபிஎஸ் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை | ADMK

x

சென்னை ஈ.சி.ஆரில் பெண்களை இளைஞர்கள் காரில் துரத்திய சம்பவம் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், பெண்கள் இரவு நேரத்தில் நடமாடும் சுதந்திர உரிமை கூட திமுக ஆட்சியில் பறிக்கப்பட்டிருக்கிறதா? என்றும், குற்றம் செய்பவர்கள் திமுகவினர் என்றால் காவல்துறை காலம் தாழ்ந்துதான் செயல்படுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்