``அம்பி, ரெமோ என ஈ.பி.எஸ் இரட்டை வேடம்''.. கே.என்.நேரு
ஆட்சியில் இருந்தபோது சொத்து வரி உயர்வுக்கு கையெழுத்து போட்ட அதிமுக, தற்போது அதைப் பற்றி பேசுவதற்கே அருகதையில்லை என்று தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "15-ஆவது நிதியாணை பரிந்துரை செய்த சொத்து வரி உயர்வை, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு ஒப்புக்கொண்டது. அவர்களின் கையெழுத்தின் அடிப்படையில், சொத்து வரி உயர்வை தற்போது கட்டாயமாக அமல்படுத்த வேண்டிய நிலை உருவானது," என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "இந்த வரி உயர்வால், இதுவரை சில நூறு ரூபாய் மட்டுமே வரியாக கட்டி வந்த பொதுமக்கள், இப்போது ஆயிரக் கணக்கில் கட்ட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. ஆட்சியில் இருக்கும்போது வரியை உயர்த்த ஒப்புதல் அளித்துவிட்டு, தற்போது அதனை எதிர்ப்பது, ‘அம்பி, ரெமோ மாதிரி இரட்டை வேடம் போடுவதைப் போலவே உள்ளது,” என அமைச்சர் சாடியுள்ளார்.
