EPS | ADMK | ஈபிஎஸ் பிரசாரம் முடிந்ததும் நடந்த அதிர்ச்சி

ஈரோடு மாவட்டம் பவானியில் அதிமுகவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது. பவானியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரம் முடிந்து அவர் சென்றபின் அதிமுக முன்னாள் நகர செயலாளர் கிருஷ்ணராஜ் தரப்புக்கும், தற்போதைய நகர செயலாளர் சீனிவாசன் தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்த மோதலில் ஒருவர் காயம் அடைந்தார். சம்பவம் தொடர்பாக நகர செயலாளர் சீனிவாசன் தரப்பினர் பவானி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com