"அதிமுகவில் எந்த பிரச்சனையும் இல்லை" - செல்லூர் ராஜு | ADMK

x

அதிமுகவில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடியை பழனிசாமியை குறை கூறவில்லை என்றும், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். மன்னர் திருமலை நாயக்கரின் 442-ஆவது பிறந்தநாளையொட்டி, அவரது திருவுருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, செல்லூர் ராஜூ, ராஜேந்திரபாலாஜி, ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செல்லூர் ராஜு, விவசாயிகள் நடத்திய பாராட்டு விழாவில், விழா அமைப்பாளர்களைத்தான் செங்கோட்டையன் குறை கூறினார் என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்