``இந்தியைவிட ஆங்கில கல்வி மிகவும் சக்தி வாய்ந்தது’’ - ராகுல்காந்தி

x

இந்தியாவின் முன்னேற்றத்திற்கு ஆங்கில கல்வி அவசியம் - ராகுல் காந்தி

இந்தியாவின் வெற்றி மற்றும் முன்னேற்றத்தை நிர்ணயிக்கும் மிகப்பெரிய ஒற்றை அம்சம் ஆங்கில கல்வி தான் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தி உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் கல்வி பெறுவதை விட ஆங்கில கல்வி மிகவும் சக்தி வாய்ந்தது என்று கூறியுள்ளார். இந்தி, தமிழ், கன்னட கல்வி வழங்க வேண்டும், ஆனால் அதற்கு அடுத்ததாக ஆங்கில மொழி இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஆங்கிலத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறும் பாஜகவினரின் குழந்தைகள் ஆங்கில வழிப் பள்ளியில் தான் படிப்பதாக கூறினார். அந்த வாய்ப்பை, ஏழை, பட்டியலின மற்றும் பழங்குடியின குழந்தைகளுக்கு ஏன் வழங்க கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்