அடுத்த ரெய்டு கோவையில்.. அமைச்சரின் 3வது தம்பி வீட்டையும் சுற்றிவளைத்த ED

x

கோவையில் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் மணிவண்ணன் தங்கி இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

True value home எனப்படும் கட்டுமான நிறுவனம் அமைச்சர்

கே.என்.நேரு சகோதரர்களால் நிர்வகிக்கப்பட்ட வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை, கோவை திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இந்த Tvh நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். 3 கார்களில் வந்துள்ள வருமான அமலாக்கதுறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்..

கோவையில் உள்ள TVH நிறுவன அலுவலகத்தை மணிவண்ணன் கவனித்து வருகிறார். இந்நிலையில் மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள TVH ஏ காந்தா அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் மணிவண்ணன் இல்லத்தில் இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருகின்றது. சோதனையின் பொழுது பாதுகாப்புக்காக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்