Karnataka | Siddaramaiah | சித்தராமையா பரபரப்பு விளக்கம்
பெங்களூரு எலஹங்கா அருகே உள்ள கோகிலு கிராமத்தில், சட்டவிரோதமாக கூடாரம் அமைத்து தங்கியிருந்த பொதுமக்களுக்கு முறையான நோட்டீஸ் அனுப்பிய பின்னரே அவர்களது குடியிருப்புகள் அகற்றப்பட்டதாக முதலமைச்சர் சித்தராமையா விளக்கம் அளித்துள்ளார். கோகிலு கிராமத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில், 164 கூடாரங்களை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தள்ளியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், கர்நாடக அரசின் சார்பில் அனுப்பிய நோட்டீஸுக்கு பொதுமக்கள் பதிலளிக்காததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சித்தராமையா கூறியுள்ளார்.
Next Story
