All Party Meeting | இன்று முக்கிய கூட்டம்.. விரையும் மூத்த அமைச்சர்கள்
அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சார கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாக, மூத்த அமைச்சர்கள் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததையடுத்து, தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து சமர்ப்பிக்குமாறு உயர் நீதிமன்றம், தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக, இந்த நெறிமுறைகள் குறித்து விவாதிக்க, ஏற்கெனவே முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்ற நிலையில், மூத்த அமைச்சர்கள் தலைமையில் இன்று கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்க அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Next Story
