கூட்டுறவு வங்கியில் மாணவர்களுக்கு கல்வி கடன்.. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்
கூட்டுறவு வங்கியின் வைப்பு தொகையை பொறுத்து கல்வி கடன் திட்டம் குறித்து பரிசீலனை செய்யப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
தற்போது கூட்டுறவு வங்கிகள் கடனை வழங்கும் மையமாக மாறியுள்ள நிலையில், பொதுமக்கள் தங்களது வைப்புத் தொகையை அதிகரிக்க வேண்டும் என்றும் வைப்பு தொகை ரீதியாக பொருளாதாரம் வலுவடைந்தால், கல்வி கடனும் வழங்க முடிவு செய்யப்படும் என்றும் அதற்கான விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
Next Story
