மாநிலப் பட்டியலில் கல்வி..! முதல்வர் ஸ்டாலின் உறுதி | MK Stalin Speech
கல்வியை மாநிலப் பட்டியலில் சேர்ப்பதற்கான போராட்டம் தொடரும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அமைச்சர் அன்பில் மகேஷ் எழுதிய "தேசிய கல்விக் கொள்கை - 2020 எனும் மதயானை" என்ற நூல் வெளியீட்டு விழா கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று, முதல் பிரதியை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய சிங், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கோபால கவுடா, முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.பின்னர் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக, திமுக அரசு போர்வாளை சுழற்றிக் கொண்டு இருப்பதாக தெரிவித்தார்
Next Story
