Edappadi Slams DMK Govt | உலுக்கி எடுத்த சாமியாத்தாள் கொலை - கொந்தளித்த எடப்பாடி
தொடரும் தோட்டத்து வீட்டு கொலைகள் - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தோட்டத்து வீட்டு கொலைகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சாமியாத்தாள் என்ற மூதாட்டி, தோட்டத்து வீட்டில் மர்மக் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் , தோட்டத்து வீடுகளில் உள்ள விவசாயிகளை குறி வைத்து நடத்தப்படும் இந்த கொலை- கொள்ளை சம்பவங்களை தடுக்க திமுக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொரு நாளும் பாதுகாப்பாக கடப்பதையே ஒரு அக்னிப் பரீட்சையாக மாற்றிய திமுக அரசுக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்வதாகவும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
