

தூத்துக்குடி கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள், காயம் அடைந்தவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை, சனிக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூற முதலமைச்சர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தூத்துக்குடி சென்று பார்வையிட்ட நிலையில், நாளை மறுநாள் முதலமைச்சர் பழனிசாமி தூத்துக்குடி செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.