Edappadi Palanisamy | ADMK | ``உச்ச நீதிமன்றம் ஏன் சென்றீர்கள்’’ - ஈபிஎஸ் சரமாரி கேள்வி

x

கிட்னி முறைகேடு விவகாரத்தில் தவறு செய்த மருத்துவமனை நிர்வாகம் மீது திமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். திமுக சட்டமன்ற உறுப்பினரின் உறவினருக்கு சொந்தமான மருத்துவமனை என்பதால், இடைத்தரகர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுத்திருப்பதாக குற்றம் சாட்டினார். #சிறுநீரக முறைகேடு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை, சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உத்தரவிட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் சென்று ஏன் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு அவர் கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்