Edappadi | Amitshah | தமிழக அரசியல் களமே உற்றுநோக்கிய இடத்தில் இருந்து வந்த செய்தி
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் இரவு 8 மணிக்கு மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவிலிருந்து விலகியவர்களை ஒன்றிணைக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கிய நிலையில், அவரை கட்சி பொறுப்பிலிருந்து எடப்பாடி பழனிசாமி விடுவித்தார். இந்த நிலையில், திடீரென டெல்லி சென்ற ஈபிஎஸ், இரவு 8 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. கடந்த வாரம் செங்கோட்டையன் டெல்லியில் முகாமிட்டு பாஜக மூத்த தலைவர்களை சந்தித்தார். தற்போது ஈபிஎஸ்-சும் டெல்லி சென்றது அதிமுகவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
