``நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து வெற்றி பெற செய்வோம்’’ - இன்று முக்கியமான நாள்.. ஈபிஎஸ் அறிக்கை

x

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்-ன் 108வது பிறந்தநாளை ஒட்டி, தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் மீண்டும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சியை மலரச்செய்ய உறுதி ஏற்போம் என தெரிவித்துள்ளார். தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்கும் பொறுப்பு அதிமுகவுக்கு இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அதிமுகவை வெற்றிப்பாதையில் அழைத்துச்செல்வோம் என கூறியுள்ளார். இதனிடையே, எம்ஜிஆர் பிறந்தநாளை ஒட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். சிலைக்கு எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.


Next Story

மேலும் செய்திகள்