``அதிமுக சார்-கள்'' - ஈபிஎஸ்க்கு அமைச்சர் பதிலடி
சென்னையில் பள்ளி மாணவிகள் 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை முன்வைத்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்த நிலையில், அவருக்கு அமைச்சர் சிவசங்கர் தனது எக்ஸ் தளத்தில் பதில் அளித்துள்ளார். அதில், அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் கைதானவர்கள், நடிகை அளித்த புகாரில் கைதான முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டுள்ளார். பாலியல் குற்றவாளி "சார்"களின் புகலிடமாக அதிமுகவை வைத்துக் கொண்டு, பெண்கள் நலனிலும் பாதுகாப்பிலும் அக்கறை கொண்டு சிறப்பாக செயலாற்றி வரும் அரசை குறை கூறினால் அதை மக்களே ஏற்க மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.
Next Story