காட்பாடி காந்திநகர் பகுதியில் திரண்ட தே.மு.தி.கவினர் துரைமுருகனுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பினர். தேமுதிகவின் கூட்டணி அணுகுமுறை பற்றி துரைமுருகன் பேசியதற்கு அவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதனை அறிந்த தி.மு.க தொண்டர்கள் துரைமுருகன் இல்லத்தின் முன்பு குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த காட்பாடி போலீசார், அங்கு வந்து தே.மு.தி.கவினரை கலைந்து செல்லுமாறு உத்தரவிட்டனர். அதனை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட தே.மு.தி.கவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.