DMK vs TVK | உதயநிதி போஸ்டரை கிழித்த தவெக முக்கிய புள்ளி `தாதா’ ராஜன்.
திமுக போஸ்டர் கிழித்து கொலை மிரட்டல் விடுத்த த.வெ.க நிர்வாகி மீது வழக்கு.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், திமுக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த த.வெ.க நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வாகையடி தெருவில் ஒட்டப்பட்டிருந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் போஸ்டரை, த.வெ.க மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தாதா ராஜன் கிழித்துள்ளார். இதனை, நாகர்கோவில் கிழக்குபகுதி திமுக இளைஞரணி அமைப்பாளர் அஜித் தட்டிக்கேட்ட போது, தாதா ராஜன் அவருக்கு கொலைமிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக வீடியோ ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்ட நிலையில், தாதா ராஜன் மீது கோட்டார் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
