DMK vs TVK| திமுக ஆர்ப்பாட்டத்தின் போது அரசு டாக்டருக்கும் இன்ஸ்பெக்டருக்கும் வெடித்த மோதல்
அரசு மருத்துவர் - பெண் ஆய்வாளருக்கு இடையே சாலையில் வாக்குவாதம் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், திமுக ஆர்ப்பாட்டத்தின் போது, அரசு மருத்துவருக்கும் போக்குவரத்து பெண் காவல் ஆய்வாளருக்கும் இடையே சாலையில் ஏற்பட்ட காரசார வாக்குவாதத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, தனது மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் செல்ல முயன்ற அரசு மருத்துவரை போலீசார் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அரசு மருத்துவருக்கும், அங்குப் பணியில் இருந்த பெண் போக்குவரத்து காவல் ஆய்வாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது காவல் ஆய்வாளரை மருத்துவர் புகைப்படம் எடுக்க முயன்ற நிலையில், சார்பு ஆய்வாளர் ஒருவர் மருத்துவரின் செல்போனைப் பறித்ததால் வாக்குவாதம் முற்றியது. இதையடுத்து, அங்கிருந்த பிற காவலர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி, மருத்துவரை அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது...
