Madurai மதுரையின் முக்கிய தொகுதி...சரிக்கு சமமாக மல்லுக்கட்டும் திமுக Vs அதிமுக-மக்கள் சொல்வது என்ன?

சரிக்கு சமமாக மல்லுக்கட்டும் திமுக Vs அதிமுக-மக்கள் சொல்வது என்ன?

#madurai | #tnelection2026 | #solavanthan மதுரையின் முக்கிய தொகுதி... சரிக்கு சமமாக மல்லுக்கட்டும் திமுக Vs அதிமுக - மக்கள் சொல்வது என்ன? உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறக்கூடிய தொகுதி. இந்த தொகுதியில விவசாயம், விவசாயம் சார்ந்த கூலி தொழில் மக்களோட முக்கிய வாழ்வாதாரமா இருக்கு. பிப்ரவரி 23-ல ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 246 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 243 பெண் வாக்காளர்கள், 13 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தமாக 2 லட்சத்து 12 ஆயிரத்து 502 வாக்காளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 1962-ல் இருந்து தேர்தலை சந்தித்துவரும் தொகுதியில அதிகப்பட்சமாக திமுக 6 முறை ஜெயிச்சிருக்கு. அதிமுக 5 முறையும், காங்கிரஸ் 3 முறையும் வெற்றிய வசமாக்கியிருக்கு.

X

Thanthi TV
www.thanthitv.com