DMK vs ADMK | ADMK Manifesto | ட்விஸ்ட் வைத்த அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் - வந்த ரியாக்ஷன்
அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை விமர்சித்த திமுக
அதிமுக அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் திமுகவின் 'திராவிட மாடல்' திட்டங்களை காப்பி அடித்தவை என்று அமைச்சர் ரகுபதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில், களிருக்கு 2000 ரூபாய், ஆண்களுக்கு இலவசப் பேருந்து பயணம் என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது, திமுகவின் கலைஞர் உரிமைத் தொகை மற்றும் விடியல் பயணத் திட்டத்திற்கு அவரே கொடுத்த நற்சான்றிதழ் எனக் ரகுபதி குறிப்பிட்டுள்ளார்.
புதிய திட்டங்களை கொண்டு வந்த போது, திமுக அரசு ஏமாற்றுவதாக விமர்சித்த ஈபிஎஸ், தற்போது அதே திட்டங்களை வாக்குறுதியாக வழங்க அவருக்கு எப்படி மனம் வந்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
"மேலும், 2011 மற்றும் 2016-ல் அதிமுக கொடுத்த இலவச செல்போன், வை-பை போன்ற வாக்குறுதிகள் என்ன ஆனது என மனசாட்சியைக் கேட்டுப் பார்க்க வேண்டுமென சாடியுள்ள ரகுபதி, வரும் தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதியாகிவிட்டதால், தோல்வி பயத்தில் எடப்பாடி பழனிசாமி நாடகமாடுவதாக விமர்சித்துள்ளார்.
மக்களிடம் சொல்வதற்கு எதுவுமில்லாமல் திமுகவின் திட்டங்களையே காப்பியடிக்கும் கையறு நிலைக்கு அதிமுக சென்றுவிட்டதாக ரகுபதி தனது அறிக்கையில் சாடியுள்ளார்.
