DMK | TN Election 2026 | திமுகவினர் பதுக்கி வைத்திருந்ததாக கூறப்பட்டது பறிமுதல்

DMK | TN Election 2026 | திமுகவினர் பதுக்கி வைத்திருந்ததாக கூறப்பட்டது பறிமுதல்

திமுகவினர் பதுக்கி வைத்திருந்ததாகக் கூறப்படும் 1000 அண்டாக்கள் பறிமுதல் கோவை மாவட்டம் சூலூர் அருகே இருகூரில், தேர்தல் விதிமுறைகளை மீறி திமுகவினர் பதுக்கி வைத்திருந்ததாகக் கூறி பரிசுப் பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். ரகசிய தகவலின் அடிப்படையில், செல்வ விநாயகர் கோவில் அருகிலுள்ள குடோனில் சோதனை நடத்திய அதிகாரிகள், 1000க்கும் மேற்பட்ட சில்வர் அண்டாக்கள் மற்றும் பல்வேறு பாத்திரங்களை கண்டுபிடித்தனர். முதற்கட்ட விசாரணையில், முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு வழங்க இவை வைத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.ஆவணங்கள் இல்லாததால் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், குடோனுக்கும் சீல் வைக்கப்பட்டது.இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com