மைக்கை தூக்கி எறிந்து... மேயர் முன்பு திமுக கவுன்சிலர் கொடுத்த ரியாக்சன்.. சேலத்தில் பரபரப்பு | DMK
சேலம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலர் ஒருவர், மைக்கை தூக்கி எறிந்து விட்டு வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாநகராட்சியின் செயல்பாடுகள் குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த திமுக கவுன்சிலர் குணசேகரன், பின்னர் மைக்கை வீசி விட்டு, மேயரை நோக்கி கும்பிட்டு விட்டு வெளிநடப்பு செய்தார்.
அவரைத் தொடர்ந்து, தெய்வலிங்கம், கலையமுதன் என மேலும் 2 திமுக கவுன்சிலர்கள், மாநகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக பேசினர். அப்போது, அவர்களின் குற்றச்சாட்டுகள் ஏற்புடையதுதான் என்று அதிமுக கவுன்சிலர்கள் கூறியதால், திமுக கவுன்சிலர்கள் ஒன்று கூடி, அவர்களுடன் வாக்குவாதம் செய்தனர். இதனால், அதிமுக கவுன்சிலர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
Next Story