ஜாக்டோ-ஜியோ போராட்டம்..! அமைச்சர்கள் குழு அதிரடி | DMK | Thanthi Tv

x

தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை முதல்வரிடம் தெரிவித்து, நிறைவேற்றித் தருவதாக அமைச்சர்கள் உத்தரவாதம் அளித்துள்ளதாக, பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட குழுவினர் தெரிவித்தனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்த நிலையில், தமிழக அரசு நியமித்த அமைச்சர்கள் குழு, சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது, அரசு ஊழியர்களின் கோரிக்கையை முதல்வரிடம் தெரிவித்து, நிறைவேற்றித் தருவதாக அமைச்சர்கள் குழு உத்தரவாதம் அளித்துள்ளதாக பேச்சுவார்த்தையில் பங்கேற்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்