DMK | Pongal Celebration | திமுக ஒன்றிய செயலாளர் துரை வீரமணி ஏற்பாட்டில் பிரம்மாண்ட பொங்கல் விழா
சென்னை மதுரவாயல் தொகுதிக்கு உட்பட்ட அயப்பாக்கம் ஊராட்சியில், திமுக சார்பில் திராவிடப் பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
திமுக ஒன்றிய செயலாளர் துரை வீரமணி ஏற்பாட்டில் கலைஞர் திடலில் நடைபெற்ற இந்த விழாவை திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
சாதி, மத பேதமின்றி 2026 பெண்கள் திமுகவின் கருப்பு-சிவப்பு புடவை அணிந்து ஒரே நேரத்தில் 2026 புதுப்பானைகளில் பொங்கலிட்டு சமத்துவ பொங்கலை கொண்டாடினர். இதற்காக தஞ்சையில் இருந்து ஒன்றரை டன் அரிசி, வேலூரில் இருந்து ஒன்றரை டன் வெல்லம், சீர்காழியில் இருந்து 10 ஆயிரம் கரும்புகள், விழுப்புரத்தில் இருந்து 2026 பொங்கல் பானைகள் வரவழைக்கப்பட்டன. மேலும், மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், கரகாட்டம், சிலம்பம் என கிராமிய கலை நிகழ்ச்சிகள் விழாவுக்கு சிறப்புச் சேர்த்தன. ஒரே நேரத்தில் 2026 பெண்கள் பொங்கலிட்ட இந்த நிகழ்வு ராபா உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.
