திமுக எம்.பி கதிர் ஆனந்த் நீதிமன்றத்தில் ஆஜர்

கடந்த 2012-13-ல் முறையாக வரி செலுத்தாததாக கூறி நோட்டீஸ் அனுப்பிய பின் 2016-ல் மிகத்தாமதமாக வரி செலுத்தினார் என அமைச்சர் துரைமுருகனின் மகனும், எம்பியுமான கதிர் ஆனந்த் மீது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வருமானவரித் துறை வழக்குத் தொடர்ந்தது. இவ்வழக்கில் ஆஜராகாமல் கதிர் ஆனந்த் இருந்த நிலையில், ஜாமினில் வரக்கூடிய வாரன்ட்டை வேலூர் நீதிமன்றம் பிறப்பித்தது. நீதிமன்றத்தில் இன்று அவர் ஆஜரானதை தொடர்ந்து, அவர் மீதான வாரன்ட் ரத்து செய்யப்பட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com