மா.செ. பதவி பறிப்பு - ஆக்‌ஷன் மோடில் MKS.. திமுகவில் திக்..திக்..

x

தி.மு.க. தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலாளர் மாற்றப்பட்டுள்ளார். தி.மு.க தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்த தடங்கம் சுப்பிரமணியத்திற்கு பதிலாக தர்மசெல்வன் நியமிக்கப்படுவதாக, தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். கடந்த 2 வாரத்தில் மட்டும் திமுகவில் 7 மாவட்ட செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். தேர்தல் பணி, கட்சியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்துதல், மாவட்ட நிர்வாக சீரமைப்பு உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து இந்த மாற்றம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்