DMK Bike Rally | திமுக தலைமை போட்ட உத்தரவு.. களத்தில் பார்முலாவை மாற்றிய நிர்வாகிகள்
நெல்லை மாவட்டம் களக்காட்டில் திமுக சார்பில் பிரமாண்டமான மோட்டார் பைக்கில் பேரணி நடைபெற்றது. மதுரையில் நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் திமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை தீவிர படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நெல்லை மாவட்டம் களக்காடு தெற்கு ஒன்றிய திமுக சார்பில் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடந்தது. களக்காடு அண்ணா சிலை முன்பு இருந்து தொடங்கிய பேரணியை களக்காடு தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும் களக்காடு நகராட்சி துணை சேர்மனுமான ராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியானது கிராமங்கள் தோறும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய பிறகு கலுங்கடி கிராமத்தில் நிறைவு பெற்றது. இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
