சட்ட விரோத மது விற்பனை அரசியல் பிரமுகர் கைது

x

வத்தலகுண்டு அருகே சட்ட விரோதமாக, மது விற்பனையில் ஈடுபட்டதாக திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டார்.திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே, உள்ள கோம்பைபட்டியில், அரசு அனுமதியின்றி 24 மணி நேரமும், கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. புகாரின் மீது நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், சாக்கு பையில் வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து, உடைத்ததோடு, சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், சென்ற , சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக திமுக நிர்வாகி சிவமணி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்