DMK Election Manifesto | 2026 தேர்தல் அறிக்கை - இதுவரை யாரும் செய்யாததை செய்த திமுக

x

தேர்தல் அறிக்கைக்கு செல்போன் செயலி மூலம் கருத்து கேட்க திமுக முதல் முறையாக திட்டமிட்டுள்ளது

இதற்கான பிரத்யேக செயலியை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை அறிமுகம் செய்து வைக்கிறார்

தேர்தல் அறிக்கையில் என்னென்ன விஷயங்கள் இடம் பெற வேண்டும் என்று பொதுமக்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவிப்பதற்காக பிரத்தியேக செயலியை திமுக தலைமை உருவாக்கியுள்ளது.

தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய விஷயங்களை செயலி மூலம் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என திமுக தெரிவித்துள்ளது.

இதற்கான செயலியை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க உள்ளார்.

கனிமொழி எம்.பி தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஜனவரி 9ஆம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் இருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்