திமுகவில் இணைந்த திவ்யா சத்யராஜ்... துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு

x

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ், தி.மு.க.வில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திவ்யா சத்யராஜ்-க்கு தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளராக இருந்த மைதீன்கான் அப்பொறுப்பிலிருந்து மாற்றப்பட்ட நிலையில், மைதீன்கானுக்கு திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவுத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. திமுக செய்தித்தொடர்பு துணைச் செயலாளராக சூர்யா கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்