DMK | திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் மாநாடு - பிரம்மாண்டமாக ரெடியாகும் களம்
திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் மாநாடு- விரிவான ஏற்பாடுகள். திருவண்ணாமலையில் இன்று நடைபெறும் திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் மாநாட்டிற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 135 ஏக்கர் பரப்பளவில் இந்த மாநாட்டில், திமுகவின் 29 மாவட்டங்களில் இருந்து 1 லட்சத்து 30 ஆயிரத்து 329 கிளை நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர். மாநாட்டுக்கு வருகை தரும் நிர்வாகிகளுக்குப் புகைப்படம் மற்றும் பெயருடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. நிர்வாகிகள், மாவட்ட வாரியாக அமர்வதற்குத் தனித்தனி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாநாட்டில், திமுக வரலாறு, முன்னோடிகள் மற்றும் இளைஞரணியின் 45 ஆண்டு காலப் பயணத்தை விளக்கும் வரலாற்றுப் புகைப்படக் கண்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
Next Story
