2 நாளில் சென்னை வரும் 3 மாநில முதல்வர்கள் - அதிரடிக்கு ரெடியாகும் திமுக
2 நாளில்
சென்னை வரும் 3 மாநில முதல்வர்கள்
அடுத்தடுத்து அதிரடிக்கு ரெடியாகும் திமுக
நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக, சென்னையில் வரும் 22ம் தேதி நடைபெறவுள்ள கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில், கேரளா, தெலங்கானா, பஞ்சாப் மாநில முதல்வர்களும், கர்நாடக துணை முதல்வரும் கலந்து கொள்ள இருப்பதாக, திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலன் தெரிவித்தார். அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தான் பாஜக தொகுதி மறுசீரமைப்பு செய்ய முடிவு செய்துள்ளதாகவும், பாஜக ஆளும் மாநில அரசுகளுக்கும் பாதிப்பு உள்ளதாகவும், ஆனால் அவர்கள் கேள்வி எழுப்ப மறுப்பதாகவும் தெரிவித்தார்.
Next Story
