DMK Congress | திமுக மேயர், காங்கிரஸ் கவுன்சிலர் இடையே வாக்குவாதம்
திமுக மேயர், காங்கிரஸ் கவுன்சிலர் இடையே வாக்குவாதம்
திருப்பூர் மாநகராட்சி கூட்டத்தில் சொத்து வரி உயர்வு மற்றும் குப்பை விவகாரம் தொடர்பாக திமுக மேயருக்கும், காங்கிரஸ் கவுன்சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 'பழையதை பேசி ராகுல் காந்தி அடையாளத்தை இழக்கப்போகிறார்' என மேயர் தினேஷ் குமார் விமர்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதற்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ் கவுன்சிலர் செந்தில்குமார், 'திமுக தனித்து நின்றால் டெபாசிட் போய்விடும், ஜெயலலிதா இருந்தபோது பல இடங்களில் திமுக டெபாசிட் இழந்ததை மறக்க வேண்டாம்' என ஆவேசமாக பேசினார். இரு தரப்பினரிடையே ஏற்பட்ட இந்த வார்த்தைப் போரால் மாமன்ற கூட்டத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
