திமுகவில் இணைந்தது ஏன்? - ஓப்பனாக சொன்ன சத்யராஜின் மகள் திவ்யா

x

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ், முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். ஊட்டச்சத்து நிபுணராக உள்ள திவ்யா, திராவிட கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்... அவ்வப்போது அரசியல் கருத்துகளை தெரிவித்து வந்த திவ்யா, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார். அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு, எம்.பி. டி.ஆர்.பாலு ஆகியோரும் உடனிருந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்