திமுக தொண்டர்களுக்கு திடீரென கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்

x

தமிழுக்கும், சமஸ்கிருதத்திற்கும் பா.ஜ.க ஒதுக்கும் நிதியின் வேறுபாடே, அவர்கள் தமிழ்ப் பகைவர்கள் என்பதை வெளிச்சமிட்டு காட்டிவிடும் என முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தி.மு.க தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஓட்­டுக்­காக உதட்­ட­ள­வில் தமிழை உச்­ச­ரித்து, உள்­ள­மெங்­கும் ஆதிக்க மொழி­யு­ணர்வு கொண்டு மத்திய அரசு செயல்படுவதாக சாடியுள்ளார். தமிழ் உள்­ளிட்ட மாநில மொழி­க­ளைப் பேசு­ப­வர்­களை இரண்­டாந்­தர குடி­மக்­க­ளாக நடத்த முயற்­சிப்பதாகவும் மொழித்திணிப்பு ஒரு நாட்­டில் எத்­த­கைய

விளை­வு­களை உண்­டாக்­கும் என்­பதை உலக சரித்திரத்­தைப் புரட்­டி­னால் புரிந்­து ­கொள்­ள­லாம் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்