Villivakkam | DMK | TN Election | வில்லிவாக்கத்தில் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் தீவிர பிரசாரம்
Villivakkam | DMK | TN Election | வில்லிவாக்கத்தில் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் தீவிர பிரசாரம் #villivakkam #dmk #tnelection2026 #electioncommission #tnelection #election2026 #electionswiththanthitv #thanthitv #therthalthiruvizha வில்லிவாக்கத்தில் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் தீவிர பிரசாரம் சென்னை வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன், தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார். நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்த அவர், இன்று காலை வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தோழமைக் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து, 'உதயசூரியன்' சின்னத்திற்கு அவர் ஆதரவு திரட்டினார். பொதுமக்களிடம் அரசின் சாதனைகளை விளக்கிப் பேசிய அவரோடு, ஏராளமான திமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் உற்சாகமாகப் பங்கேற்றனர். தொகுதி முழுவதும் கார்த்திக் மோகனுக்குக் கிடைத்து வரும் வரவேற்பு, திமுகவினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
