DMKCampaign|"அமைச்சர் பிரசாரத்தின்போது தகராறு செய்தவர்கள் மோசடிக்காரர்கள்"-ஊர் மக்கள் குற்றச்சாட்டு
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் அனிதா ராதா கிருஷ்ணன் பிரசாரத்தின்போது தகராறில் ஈடுபட்டவர்கள் மோசடிக்காரர்கள் என ஊர்மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கடந்த 4ஆம் தேதி, அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் பிரசாரம் செய்யும் போது ஊரில் உள்ள கோயிலுக்கு அவர் பணம் கொடுக்கவில்லை எனக்கூறி ஒரு சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் பணம் கொடுத்தார் என்றும், அதனை ஒரு சிலர் கையாடல் செய்துவிட்டு பிரச்சனை செய்வதாகவும் ஊர் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
