DMK Campaign | தீவிரமாய் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் கதிரவன் - ஆரத்தி எடுத்து வரவேற்ற பெண்கள்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிரவன், பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்... அவருக்கு பேண்ட் வாத்தியங்களுக்கு மத்தியில் பெண்கள் ஆரத்தி எடுத்து மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். அதை தொடர்ந்து பேசிய திமுக வேட்பாளர் கதிரவன், அப்பகுதியினரின் கோரிக்கையுடன், திமுகவின் வாக்குறுதிகளை வெற்றி பெற்றவுடன் கண்டிப்பாக நிறைவேற்றுவேன் என்று உறுதியளித்தார். அனைவரும் ஒன்று தான், எனவே அமைதி, வளம், வளர்ச்சியை நோக்கி பயணிப்போம் என்றும், அதற்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறும் திமுக வேட்பாளர் கதிரவன் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com