திமுக, பாஜக நிர்வாகிகள் அடிதடி - ஆக்ரோஷ மோதல்..பரபரப்பு காட்சி

x

வேலூரில் திமுக நிர்வாகிகளும், பாஜக நிர்வாகிகளும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தில், இரு தரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குடியாத்தத்தை அடுத்த கல்லூர் பகுதியில் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் கல்லூரி ரவி என்பவரது தரப்புக்கும், பாஜக மாவட்ட இளைஞரணி செயலாளர் வினோத் என்பவரது தரப்புக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில், இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டதில், இரு தரப்பிலும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இருவரது புகாரின் பேரிலும், குடியாத்தம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்