அண்ணா சிலை மீது திமுக, பாஜக கொடிகள்-காவல்துறை விளக்கம்

x

தஞ்சாவூரில் அண்ணா சிலை மீது திமுக மற்றும் பாஜக கொடிகளை அணிவிக்கப்பட்டதற்கு காவல்துறையினர் விளக்கமளித்துள்ளனர். விலாசம் தெரியாத மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் கொடிகளை இணைத்து அண்ணா சிலைக்கு மாலை போன்று அணிவித்து சென்றுள்ளார். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அந்த கொடிகளை அகற்றியதாகவும், தற்போது விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்